விசைத்தறியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தலாமே: கூட்டமைப்பு கோரிக்கை

விசைத்தறியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தலாமே: கூட்டமைப்பு கோரிக்கை
X

கோப்பு படம்

விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. விசைத்தறி வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முகாம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து, கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், தமிழக முதல்வர் அறிவித்துள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம் திட்டத்தில் தடுப்பூசி போட வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, எங்கள் சங்கம் மூலம் முகாம் அமைத்து அல்லது அரசு அறிவிக்கும் மருத்துவமனையில் அல்லது பொது வெளியில் ஏற்பாடு செய்து தர வேண்டும். இதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவர்; தொழில் பாதிக்காது என்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது