தேர்தலில் யாருக்கு ஓட்டு? வேட்பாளர்களுக்கு பல்லடம் மக்கள் நிபந்தனை

தேர்தலில் யாருக்கு ஓட்டு? வேட்பாளர்களுக்கு   பல்லடம் மக்கள் நிபந்தனை
X

பைல் படம்.

தேர்தலில் யாருக்கு ஓட்டு? போடுவது என வேட்பாளர்களுக்கு பல்லடம் மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 10, 11 வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சில வீதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருபவர்கள் மட்டுமே ஓட்டு கேட்டு வார்டுக்குள் வர வேண்டும் என, அவர்கள் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!