நகர்ப்புற தேர்தல்: தமாகா., நிலைபாடு என்ன?

நகர்ப்புற தேர்தல்: தமாகா., நிலைபாடு என்ன?
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தமாகா.,வினர் ஆர்வமுடன் உள்ளனர்.

பல்லடத்தில், தமாகா., கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ராமசாமி, தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் விடியல் சேகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சின்னசாமி, துணை தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மூன்று நகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு, ஆறு சீட் கேட்டுள்ளோம். கூட்டணி இறுதி செய்வதை பொருத்து, தேர்தல் பணி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டது. பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகள், அவிநாசி, முத்துார், குன்னத்துார், சாமளாபுரம் பேரூராட்சிகளில் போட்டியிட மனுக்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்