ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய பாஜகவினர்

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஷியாம் பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஜன சங்கத்தின் நிறுவனரான ஷியாம் பிரசாத் முகர்ஜிபிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவி வழங்குதல், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அவ்வகையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில், பாஜக அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர் பிரிவின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்புசாரா பிரிவின் மாவட்ட தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில், மகளிரணி மாவட்ட தலைவர் சுதா மணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, தமிழ் வளர்ச்சிப்பிரிவு மாவட்ட தலைவர் திருஞானசம்பந்த மூர்த்தி, மண்டல் தலைவர் மூர்த்தி, அமைப்புசாரா பிரிவு மாவட்ட துணைத்தலைவர் லோகச்சந்தர், செயலாளர்கள் பார்த்தசாரதி , ஞானசேகர், மண்டல் தலைவர் ஜெயப்பிரகாஷ், மண்டல் செயலாளர்கள் சுந்தரம், ஆட்டோ சுரேஷ், மற்றும் மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், ஷியாம் பிரசாத் முகர்ஜி குறித்து பலரும் நினைவு கூர்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu