மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்
நெசவாளர்கள், தாங்களே நேரடியாக பாவு நுால் வாங்கி, நெசவு செய்யும் துணிகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இதுகுறித்த தெளிவான அறிவிப்பு ஏதுமில்லாததால், நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பல்லடம் பகுதி கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: தேசிய கைத்தறி முன்னேற்ற கழகம் மூலம், நெசவாளர்களே நுால்களை நேரடியாக வாங்கும் திட்டத்தை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதில், மானிய விலையில் நூல்களை பெற்று, சொந்தமாக துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இதில், 10 சதவீதமாக இருந்த மானியம், 15 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் பயன்பெற, நெசவாளர்களுக்கு, தேசிய கைத்தறி முன்னேற்ற கழகம் மூலம் 'பாஸ்புக்' வழங்கப்பட்டது. ஆனால், இந்த அலுவலகம் எங்கு உள்ளது, நுால் வாங்க யாரை அணுகுவது என்பது உள்ளிட்ட எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்காக, அதிகாரிகள் யாரேனும் நியமிக்கப்பட்டுள்ளார்களா, இத்திட்டத்தில் நெசவாளர்கள் யாரும் பயன்பெற்றுள்ளார்களா என்ற எந்த விவரமும் இல்லை. இதுகுறித்து, அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu