மண் வளம் காக்க விவசாயிகள் ஆர்வம் - சனப்பை சாகுபடியில் நாட்டம்

மண் வளம் காக்க விவசாயிகள் ஆர்வம் - சனப்பை சாகுபடியில் நாட்டம்
X

கோப்பு படம் 

மண் வளத்தை காக்க, சனப்பை சாகுபடியில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

இயற்கை உரம் பற்றாக்குறையால், செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பூச்சிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. பூச்சிகளை அழிக்க விவசாயிகள் பூச்சிகொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், மண் வளம் பெருமளவில் சீர்கெட்டுள்ளது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பொங்கலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்ணில் உள்ள கார்பன் அளவு, 0.5 சதவிகிதத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது. இதே வேகத்தில் மண்ணில் உள்ள கார்பன் அளவு குறைந்து கொண்டே சென்றால் வருங்காலத்தில் பயிர் விளைச்சல் அடியோடு பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்கவும், மண்ணில் உள்ள கார்பன் அளவை அதிகரிக்கவும், வேளாண் துறையின் அறிவுரைப்படி, விவசாயிகள் பசுந்தாள் உர செடிகளான, சணப்பை, கொள்ளு, தட்டை, தக்கை பூண்டு ஆகியவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மண் வளம் காக்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!