பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்   தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை
X

தடுப்பூசி முகாம் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் செப்.,12 ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாம் நடத்துவது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.

பல்லடம் நகராட்சி கமிஷனர் விநாயகம், தாசில்தார் தேவராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முகாம் குறித்து பேசினர்.

பல்லடம் பகுதியில் முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், தடுப்பூசி தொடர்பாக விரிவாக எடுத்து கூறப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!