திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று

திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று
X
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கண்காணிப்பு தீவிரப்படுப்படுத்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏறத்தாழ, 580 மாணவிகள் படிக்கின்றனர். கல்வித்துறையின் உத்தரவின் பேரில், பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம், மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தபோது, மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture