கொரோனா ஊரடங்கு: பல்லடத்தில் 5 கோடி மீட்டர் துணி தேக்கம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சோமனூர், காரணம்பேட்டை, மாதப்பூர், கேத்தனூர், இடுவாய் உள்ளிட்ட இடங்களில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவற்றில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைத்தறிகள் இயங்கி வருகிறது.
இப்பகுதியில் தினசரி ரூ.30 கோடி மதிப்பினா ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் துணிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநில வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல்லடத்தில் இருந்து துணிகள் அனுப்ப முடியவில்லை. இதன் காரணமாக, பல்லடம் சுற்றுப்பகுதி விசைத்தறி கூடங்களில் ரூ. 30 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்து உள்ளன.
விசைத்தறியாளர்கள் கூறுகையில், பல்லடம் சுற்று வட்டாரத்தில் தினசரி 1 கோடி மீட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக லாரிகள் செல்ல முடியாமல் உள்ளதால், இப்பகுதியில் 5 கோடி மீட்டர் துணி தேக்கமடைந்துள்ளன. விசைத்தறி கூடங்களில் பணியாற்றி வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற விட்டதாக, தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu