தொடர் உண்ணாவிரதம்: விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

தொடர் உண்ணாவிரதம்: விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
X

விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்தது. சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். முடிவில், அவர் கூறியதாவது;

ஏழு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாத கூலி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, 25 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, கூலி உயர்வை வலியுறுத்தி விரைவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!