ரோட்டரி சங்கம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான கழிப்பறை

ரோட்டரி சங்கம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான கழிப்பறை
X

பைல் படம்.

பல்லடம் ரோட்டரி சங்கம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான கழிப்பறை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. தினமும், ஏராளமான கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாத நிலை இருந்தது. இதையறிந்த பல்லடம் ரோட்டரி சங்கத்தினர், கழிப்பறை கட்ட முடிவு செய்தனர். கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணி நடந்து வந்த சூழலில், கழிப்பறையை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார். டாக்டர். அபுதாகிர் பாஷா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் கண்ணன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மார்ட்டின், அரவிந்த் பாபு, நாராயணசாமி மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!