பல்லடம் நகராட்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

பல்லடம் நகராட்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
X

பல்லடம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

பல்லடம் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், திட்டப் பணிகள், மழை நீர் வடிக்கால் தூர்வாரும் பணிகள், கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். மேலும், நகராட்சி அலுவலகத்தில், வருவாய் மற்றும் செலவினங்கள், வரிவசூல் ஆகியவையும், மழை நீர் கட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு வாரம் இருமுறை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் விநாயகம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!