/* */

தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால், தீவனம் விலை குறையும் என பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

HIGHLIGHTS

தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

பல்லடம் சுற்று வட்டாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி வளர்ப்பு மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள் என லட்சக்கணக்கானோர் பயன்பெறுகின்றனர்.

கறிக்கோழி வளர்ப்புக்கு கோழித் தீவனம் முக்கிய பங்காக உள்ளது. தீவன ஏற்றுமதியால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தீவன இறக்குமதிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. தீவன இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தீவன உற்பத்தியாளர்கள் சங்கம், கறிக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், தீவன இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால், தீவனம் விலை குறையும் என பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் சமீபத்தில் பெய்த மழையின்காரணமாக கோழிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட துவங்கி உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.


Updated On: 19 Aug 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...