பல்லடத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பல்லடத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

பல்லடத்தில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசுகிறார், எம்எல்ஏ- உடுமலை ராதாகிருஷ்ணன்.

புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் வழங்கி, ஆலோசனைகளை வழங்கினர்

பல்லடம் நகர அ. தி. மு. க. சார்பில் , புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வு கூட்டம் , உறுப்பினர் புதுப்பிப்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலை மையில் நடைபெற்றது.

அ. தி. மு. க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 18 வார்டுகளுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் வழங்கி , புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் , அவைத்தலைவர் சிவாச்சலம் , கூட்டுறவு சங்கத்தலைவர் பானு பழனிச்சாமி , அ.தி.மு.க. நிர்வாகி கள் தமிழ்நாடு பழனிச்சாமி , தர்மராஜன் , வெங்கடேஷ் குமார் , தகவல் தொழில்நுட்ப பிரிவு ரமேஷ் , கந்தசாமி , ஆசிரியர் ரங்கசாமி , நாராயணன் , அதிமுக. நிர்வாகி கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் பல்லடத்தை அடுத்த கரடிவாவியில் தெற்கு ஒன்றிய அ திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சித்து ராஜ் தலைமையில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. எம். எஸ். எம். ஆனந்தன் எம். எல். ஏ. ஆகியோர் கலந்து கொண்டு படிவங்களை வழங்கினார்கள். இதில், பிரேமா வாட்டர் பழனிச்சாமி , மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி , தொழில்நுட்ப அணி கோகுல் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!