ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைப்பு

ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைப்பு
X
பல்லடத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பல்லடத்தில் கொரோனா ஊரடங்கு விதிமீறி செயல்பட்ட 9, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லடம் நகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் மாஸ்க் அணிந்தும், தனிமனித இடைவெளி கடைப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர்கள் பல்லடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 3, நகை அடகு கடைகள்,2, துணி கடைகள், மோட்டார் வாகனஉதிரி பாகனம் விற்கும் கடை உள்பட 9, கடைகள் விதிமுறை செயல்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த 9, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதி அளிக்காத கடைகள் திறந்தால், பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!