மது அடிமையால் வந்த வினை: பல்லடம் சுற்று வட்டாரத்தில் 4 பேர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நல்லகவுணடன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்தார். மது குடிக்க பணம் இல்லாததாலும், கவனிக்க ஆள் இல்லாததால, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பலவேட்சி. தினசரி குடித்து விட்டு வந்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவி கோபித்துக்கொண்டு, தந்தை வீட்டு சென்று விட்டார். மனமுடைந்த சரவணன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜ், கொரோனாவால் வீட்டில் வேலையின்றி இருந்தார். குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. குடிக்க பணம் தராத நிலையில், அவிநாசி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடத்தை அருகே கே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோபால், இவர் தனது மனைவி கீதாஞ்சலியுடன் சுல்தான்பேட்டையில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெறுத்துப்போய், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நால்வரது உடல்களும் பல்லடம் அரசு மருத்துவனைமயில் பிரேத பரிசோதனை செய்து, அவர்களிடம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து 4 பேரில், 3 பேர் மதுக்கு அடிமையாகி, அதன் விளைவாக தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu