திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் 2 ம் சாகுபடி விவசாய பணிகள் துவக்கம்

திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் 2 ம் சாகுபடி  விவசாய பணிகள் துவக்கம்
X

மடத்துக்குள் பகுதியில் தயார் நிலையில் நெல் நாற்று.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிகளில் 2 ம் சாகுபடி விவசாய பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் நாற்று விடும் பணி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு பருவமழை நன்றாக பெய்து உள்ளதால், இப்பகுதிகளில் நெல் நாற்று விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவமழை நன்றாக பெய்து உள்ளதால், நீராதாரம் நன்றாக உள்ளது. இதன் காரணமாக நெல் சாகுபடிக்கானபணிகள் ஆயத்த பணிகள் துவக்கப்பட்டு, நாற்று விடப்படுகிறது. நாற்று தயாராகும் வரையில், வயல்கள் சமன் செய்யும் பணி நடக்கும். நீராதாரம் நன்றாக உள்ளதால் நெல் விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!