மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
X

பைல் படம்.

மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் மதகடி புதூரை சேர்ந்தவர் கிட்டுசாமி, விவசாயி. இவரது மனைவி மயிலாத்தாள்,56. இவர், குமரலிங்கம் குள்ளக்கார் ஓடைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தென்னை ஓலைகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4பேர், மயிலாத்தாள் அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு மிரட்டினர். அப்போது மயிலாத்தாள் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், மயிலாத்தாள் கையில் வைத்து இருந்த கத்தியை பிடிங்கி, கை மற்றும் தோள் பட்டையில் குத்தினர். அதற்குள் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பொது மக்கள் ஓடி வந்தனர். இதை கண்ட நான்கு பேரும், தப்பி ஓடினர். இதில், 17, வயது சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3, பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்ட சிறுவனை குமரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். மயிலாத்தாள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பி ஓடிய 3, பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது