மடத்துக்குளம்: அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் நாளை தரிசனம் ரத்து

மடத்துக்குளம்: அர்ச்சுனேஸ்வரர்  கோவிலில் நாளை தரிசனம் ரத்து
X

அர்ச்சுனேஸ்வரர் கோவில்

அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் நாளை தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மடத்துக்குளம் அருகே உள்ள 900 ஆண்டு பழமையான அர்ச்சுனேஸ்வரர் எனும் சிவன் கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காலகட்டமாக இருக்கும் இந்த வேளையில் நோய் தொற்றுகளை தவிர்க்க வகையில், நாளை 6. 10. 2021 புதன் அன்று நிகழ உள்ள அமாவாசை திதியை முன்னிட்டு, கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலை ஒட்டிய அமராவதி ஆற்று பகுதியிலும் உள்ள கரையோரங்களில் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா