/* */

யானையை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு வனத்துறையினர் தேடுதல் வேட்டை

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையை தாக்கி, அதை வீடியோவாக வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

யானையை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு  வனத்துறையினர் தேடுதல் வேட்டை
X

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் மானூப்பட்டி வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் குட்டியுடன் வந்த யானைகளை, இளைஞர்கள் சிலர் கற்களால் தாக்கி விரட்டினர். அதை வீடியோக எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் பரவி விட்டனர்.

வீடியோ பதிவின் அடிப்படையில் திருமூர்த்தி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த காளிமுத்து, செல்வம், அருள்குமார் ஆகிய மூவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம், வன விலங்குகளை காயப்படுத்துதல், அரசு சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், யானையை தாக்கிய கும்பம் தலைமறைவாகி விட்டது.

தலைமறைவான இளைஞர்களை, உடுமலை, அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 May 2021 1:13 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!