செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
X

அறுவடைக்கு தயாராக உள்ள செண்டுமல்லி.

முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். புங்கமுத்தூர், தளி,பாப்பனூத்து, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நீர் பாசனம் மூலம் தற்போது மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செண்டுமல்லி, மல்லிகை, கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் நாற்றுக்கள் வரை நடவு செய்து, 60 நாட்களில் பூ அறுவடையாகும் என்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil