மடத்துக்குளத்தில் 2 லட்சம் மதிப்புள்ள புடவைகள் பறிமுதல்

மடத்துக்குளத்தில் 2 லட்சம் மதிப்புள்ள   புடவைகள் பறிமுதல்
X

 ஃபைல் படம் 

மடத்துக்குளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000திற்கும் மேற்பட்ட சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, மடத்துக்குளம் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மடத்துக்குளம் பகுதி அரசியல் கட்சியினர் நடவடிக்கைகளை கண்காணிக்க 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மடத்துக்குளம் பகுதி,ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, 1000திற்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தேர்தல் அவரது உத்தரவின்பேரில், பறக்கும் படை குழு ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பறக்கும் படை குழுவில் உள்ள கார்த்திக்குமார்,

ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சேலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இப்பகுதியிலுள்ள மணியகாரர் தோட்டம் என்ற முகவரியில் வசித்து வரும், மாரிமுத்து (வயது 55) என்பவரது வீட்டில் சோதனை செய்தோம்.அப்போது 1,600 சேலைகள் இருப்பது தெரிய வந்தது. அவைகளை பறிமுதல் செய்தோம் . இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 50ஆயிரம் இருக்கும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா