மடத்துகுளம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

மடத்துகுளம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
X
மடத்துகுளம் பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மடத்துகுளம் சுற்று வட்டார பகுதியான கடத்தூர், கணியூர், மடத்துக்குளம், துங்காவி,மெட்ராத்தி, தாந்தோணி, கொழுமம், குமாரலிங்கம், பாப்பான்குளம், ஆகிய பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளை உள்ளன. இங்கு செங்கல் உற்பத்தி பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மடத்துக்குளம் பகுதியில் தொடர் கனமழை காரணமாக தற்போது செங்கல் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான செங்கல் சூளைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் உணவுக்கே வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். எனவே மடத்துக்குளம் பகுதியில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு வேலை வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil