‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு
X

Tirupur News- வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Tirupur News-மக்களுடன் முதல்வா் திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- மக்களுடன் முதல்வா் திட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது,

பொது மக்களின் குறைகள், கோரிக்கைகளை அவா்களின் இருப்பிடத்துக்கேச் சென்று கேட்டு, உடனடியாக தீா்வுகாண ‘மக்களுடன் முதல்வா் திட்டம்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிா்வாகங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 138 நகராட்சிகளில் 7 நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளக்கோவில் நகராட்சியும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், வெள்ளக்கோவிலில் நவம்பா் 22-ம் தேதி தொடங்குகிறது.

இதில், மாவட்ட உயரதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்று, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்பட்டு ஒரு மாதத்தில் தீா்வுகாணப்படும். எனவே, நவம்பா் 22 -ம் தேதி நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம், என்றாா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!