ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
Tirupur News,Tirupur News Today- அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உரையாடிய கலெக்டர் கிறிஸ்துராஜ்.
Tirupur News,Tirupur News Today - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது,
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ் நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.
மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில் மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின் இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது.
இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள், ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu