ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா
Tirupur News-மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகளில் 10, 12 -ம் வகுப்பில் பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கொங்கு மெட்ரிக். பள்ளியின் தலைவா் ஏ.கே.சி.தியாகராஜன் தலைமை வகித்தாா். முன்னதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வருமான எம்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றார்.
பள்ளி கல்வி இயக்குநா் (தனியாா் பள்ளிகள்) நாகராஜமுருகன், இணை இயக்குநா் சாந்தி, திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்ட கல்வி அலுவலா் ரத்தினகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், நிகழாண்டுக்கான தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற பொங்குபாளையம் சக்திவிக்னேஷ்வரா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சக்திவேலுசாமி கெளரவிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, 2022-23 ம் கல்வியாண்டில் 10, 12 வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள், தோ்ச்சிக்காக பாடுபட்ட முதல்வா்கள், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டன.
இதில், 135 பள்ளிகளின் முதல்வா்கள், 147 பள்ளிகள் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த 269 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக பங்கேற்றனர்.
மேலும், கூட்டமைப்பின் சாா்பில் நாள்குறிப்பும் வெளியிடப்பட்டது. திருப்பூா் டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் டோரத்தி ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu