ஊதியூரில் மாயமான சிறுத்தை; கூண்டுகளில் பிடிபடாததால் ஏமாற்றம்

ஊதியூரில் மாயமான சிறுத்தை; கூண்டுகளில்  பிடிபடாததால் ஏமாற்றம்

Tirupur News,Tirupur News Today- ஊதியூர் மலை பகுதியில் சிறுத்தை பதுங்கிய இடம் குறித்து,  டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர்.

Tirupur News,Tirupur News Today-ஊதியூரில் மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. எனவே, சிறுத்தை வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், ஊதியூரில் மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. எனவே, சிறுத்தை வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று விடுகிறது. இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால், இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை எனத் தெரிகிறது.

வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க, டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர். ஆனால், சிறுத்தை நடமாட்டம் குறித்த, கால்தட பதிவுகளை கூட காணாததால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.

வனத்துறையினர் ஊதியூர் மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்தனர். 3 கூண்டுகளில் உயிருடன் ஆட்டுக்குட்டியை விட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்யப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக டிரோன் ஆப்பரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. 25 பணியாளர்களை கொண்டு 4 குழுக்களாக பிரிந்து இரவு பகல் என தீவிர ரோந்து பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிறுத்தையின் உருவம் சிக்கவில்லை. இதுவரை வைக்கப்பட்டுள்ள மூன்றில் எந்த கூண்டுக்குள்ளும் சிறுத்தை மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றனர்.

Tags

Next Story