காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நாளை மின்தடை

காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நாளை மின்தடை
X

Tirupur News. Tirupur News Today- காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நாளை மின்வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்டுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணி நடக்க உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் நாளை (16-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் இடங்கள்

ஊதியூா் துணை மின் நிலையம் - வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் - அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

காங்கயம் மின்வாரிய கோட்டம் - கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

ராசாத்தாவலசு துணை மின் நிலையம் - மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி. வெள்ளக்கோவில் துணை மின் நிலையம் - வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாய்க்கன்பட்டி துணை மின் நிலையம் - தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!