நத்தக்காடையூர்; ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில், நாளை குருபெயர்ச்சி மகா யாக பூஜை

நத்தக்காடையூர்; ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில், நாளை குருபெயர்ச்சி மகா யாக பூஜை
X

Tirupur News. Tirupur News Today- நத்தக்காடையூரில், குருபெயர்ச்சி மகா யாக பூஜை  நாளை நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today-நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி மகா யாக பூஜை, நாளை நடைபெறுகிறது

Tirupur News. Tirupur News Today- குரு பகவான் ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை இரவு 11.24 மணி மீன ராசி ரேவதி நட்சத்திரத்திலிருந்து மேஷ ராசியில் உள்ள அசுவினி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். மங்களம் பொருந்திய சோபகிருது ஆண்டில், குரு மேஷத்தின் அசுவினி முதல் பாதத்தில் பெயர்ச்சி ஆகும் போது அவரின் 5, 7, 9 ஆகிய பார்வையால் சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிகள் மீது பதித்து, நன்மைகளை வாரி வழங்குவார். இந்த ராசியினர் குருவின் அருளால் நன்மைகளை அதிகம் அடைவார்கள் மேலும், மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்ற நிலையில் அங்கு புதனுடன் சேர்ந்து புதாதித்ய யோகம் உருவாக்குகிறார். குருவின் பெயர்ச்சியால் நாட்டிற்கும், வீட்டிற்கும் பலவகையில் நன்மைகளைத் தருபவராக விளங்குவார்.

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி மகா யாக பூஜை விழா நாளை 23- ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மங்கள இசை விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கப்பட்டு நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டியும், விவசாயம், தொழில், உத்தியோகம், செல்வம் அபிவிருத்தி பெற வேண்டியும், திருமண தடை நீங்கவும், குழந்தை இல்லா தம்பதிகள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் சங்கல்பம் யாகம், மேதா தட்சிணாமூர்த்தி யாகம், நவக்கிரக ஹோம யாகம், 27 நட்சத்திர பரிகார யாகம் ஆகிய சிறப்பு மகா யாக பூஜைகள் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு தட்சிணாமூர்த்தி, குரு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை குரு பெயர்ச்சி வார வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா