வௌ்ளகோவில்; மருத்துவ மாணவர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு

வௌ்ளகோவில்; மருத்துவ மாணவர்கள் திடீர் சாலைமறியலால் பரபரப்பு
X

Tirupur News. Tirupur News Today- வெள்ளகோவில் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள்.

Tirupur News. Tirupur News Today- வெள்ளகோவிலில், ‘சீல்’ வைக்கப்பட்ட கல்லூரியை திறக்க வலியுறுத்தி, மருத்துவ மாணவர்கள் திடீர் சாலை மறியலால், ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரோபதி மருத்துவமனை உள்ளது. வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு முறையான அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பும் கற்று கொடுக்கப்பட்டது. 44 மாணவ- மாணவிகள் தங்கி படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு போதிய மருத்துவ படிப்பு கற்று கொடுக்கவில்லை என மாணவர்கள் தங்கள் பெற்றோர் மூலமாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடமும், மருத்துவத்துறை இயக்குனரிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து திருப்பூர் கலெக்டர் உத்தரவின் பேரில் மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனையில ஆய்வு செய்தனர். இதில் உரிய அங்கீகாரம் இன்றி இந்த மருத்துவ மனையை நடத்திக்கொண்டு கல்லூரி என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கியும் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பாலசுப்பிரமணியம் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த மருத்துவ மனைக்கு சீல் வைத்தனர். இந்தநிலையில் ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரிக்கு சீல் வைத்ததை கண்டித்து நேற்று காலை வெள்ளகோவிலில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரியை மூடினால் எங்களது படிப்பு பாதிக்கப்படும்.எனவே கல்லூரியை திறக்க வேண்டும் என்றனர்.

ஒரு தரப்பு மாணவர்கள், மருத்துவ படிப்பு கற்றுத்தருவதில் குறைபாடுகளை புகார் அளித்த நிலையில், அந்த மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது. மற்றொரு தரப்பு மாணவர்கள், படிப்பு பாதிக்கப்படும் என்ற நிலையில், மறியலில் ஈடுட்டதால், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச் செய்தனர்.

‘போலி’ கள் இன்னும் பிடிபடும்

திருப்பூரில் பல இடங்களில் அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குகள் ஆய்வில் சிக்கி, அவை மூடப்பட்டு வருகின்றன. அதே போல், போலி டாக்டர்களும் பிடிபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில், 10ம் வகுப்பு மட்டுமே படித்த போலி டாக்டர் ஒருவரும் பிடிபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மருத்துவ படிப்பை கற்றுத்தரும் கல்லூரியாக செயல்பட்ட மருத்துவமனையிலும் முறைகேடு இருப்பது அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டு, அதுவும் தற்போது மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சிறந்த மக்கள் சேவையாக இருந்த நிலை மாறி, மருத்துவம் வருவாய் ஈட்டும் முக்கிய தொழிலாக மாறிவிட்டதால் இன்று, மருத்துவத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மிக சாதாரணமாகி விட்டன. தமிழக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிரடி ஆய்வுகளை நடத்தினால், இன்னும் பல ‘போலி’கள் பிடிபட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா