காங்கயம்; சிவன்மலை கோவிலில் பணிபுரிய அழைப்பு
Tirupur News. Tirupur News Today- காங்கயம், சிவன்மலை முருகன் கோவில் (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- காங்கயம், சிவன்மலை முருகன் கோவில் கொங்கு வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலில், தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலும் சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களிலும் அதிகளவில், பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, பக்தர்களின் கனவில் வரும் பொருட்கள் வைக்கப்பட்டு, பூஜிக்கப்படும். பின்னர், மற்றொரு பக்தர் கனவில் வந்து கடவுள் சொல்லும் பொருட்கள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பூஜை பொருட்கள், உலக வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் விதமாக, முருக கடவுளே, பக்தர்களின் கனவில் சொல்வதாக ஒரு ஐதீகம் உள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற காங்கயம், சிவன்மலை முருகன் கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனையாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின்கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரியத்தில் 'எச்' சான்று பெற்றவர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை, https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் வழங்கலாம். பணிகளின் பெயரை தபால் கவர் மீது எழுதி விண்ணப்பிக்க வேண்டும். இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, தகுதியான விண்ணப்பதாரர் மே 17 ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவிலுக்கு கிடைக்கும் வகையில் ஆவண நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட தபால் உறையுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu