காங்கயம், குண்டடம் பகுதிகளில் ‘வெளுத்துக்கட்டிய’ மழை

காங்கயம், குண்டடம் பகுதிகளில் ‘வெளுத்துக்கட்டிய’ மழை
X

Tirupur News, Tirupur News today- திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், குண்டடம் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. (கோப்பு படம்)

Tirupur News, Tirupur News today- இன்று காலை முதல், இரவு வரை காங்கயம், குண்டடம் பகுதிகளில், கனமழை கொட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tirupur News, Tirupur News today- திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் இன்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து மிதமான மழை பெய்தது. காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, போலீஸ் ஸ்டேசன் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

காங்கயம் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பின்னர் இரவிலும் தூரலாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால், பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், இங்கு கால்நடைகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலையும் மழை பெய்தது. இதனால் தீவன பயிர்கள் பயிர் செய்யவும் குடிநீர் பஞ்சமும் குறையும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் மகிச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாநகர பகுதியிலும், சில தினங்களாக மழை நீடித்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. சில வேளைகளில், மணிக்கணக்கில் நீடிக்கும் மழையாகவும், சில நேரங்களில், தூரலாகவும் மழை நீடித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில், இப்படி அடிக்கடி மழை பொழிவது ஓரளவு வெக்கையை தணித்து, குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் குளிர்ந்த தென்றல் வீசுகிறது. ஆனால், முற்பகல், நண்பகல், பிற்பகல் வேளைகளில் வெயில் கொளுத்துகிறது. எனினும், அவ்வப்போது பெய்யும் மழையால், திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers