காங்கயம்; உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை

காங்கயம்; உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
X

Tirupur News. Tirupur News Today- காங்கயம் பகுதியில் உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை என, வேளாண் துறை எச்சரித்துள்ளது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- காங்கயம் பகுதியில் உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை என, வேளாண் துறை அலுவலர் எச்சரித்துள்ளார்.

Tirupur News. Tirupur News Today- காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும்.

அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பயன் தருகிறதா, திட்டத்தை வரும் ஆண்டுகளிலும் தொடரலாமா என்பது தொடர்பாக கள ஆய்வு மூலம் அறிந்து அறிக்கை சமர்பிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமையில், பொங்கலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொம்முராஜூ, வேளாண்மை அலுவலர் தனவேந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சித்குமார், மஹேந்திர பிரியா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், பொங்கலூர் வட்டாரம், கேத்தனூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சுழல் கலப்பை, வாலிபாளையம் மற்றும் வி.சுள்ளிபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்பட்ட தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். பண்ணை கருவிகள் பலனளிக்கிறது. வரும் ஆண்டுகளிலும் மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர் என உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!