காங்கயம் அருகே முதியவர் கொலை; மகன், பேரன் கைது

காங்கயம் அருகே முதியவர் கொலை;  மகன், பேரன்  கைது
X

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே, முதியவரை கொலை செய்த மகன், பேரனை போலீசார் கைது செய்தனர். (மாதிரி படம்)

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே சொத்து தகராறில் முதியவரை கொன்ற மகன் மற்றும் பேரனை போலீசார் கைது செய்தனர். முதியவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த மீனாட்சிவலசு கல்லாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 82). இவர் கடந்த மாதம் 20-ம் தேதி இரவு, தனது வீட்டில் தூக்கில் சடமாக தொங்கினார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் போலீசார் அந்த இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தற்கொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொன்னுசாமி சாவு குறித்து டிரைவரான அவருடய மகன் நடராஜ் (57), பேரன் சரவணன் (25) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாக கூறப்படுகிறது. . ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முதியவர் பொன்னுச்சாமி தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் கடந்த மாதம் 20-ம் தேதி இரவு பொன்னுசாமிக்கும், நடராஜூக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த நடராஜ் கோபத்தில் பொன்னுசாமியை கொன்று, தூக்கில் தொங்கவிடப்பட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து காங்கயம் போலீசார் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்காக பதிவு செய்து நடராஜ் மற்றும் அதற்கு துணையாக இருந்த நடராஜின் மகன் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காங்கயம் அருகே சொத்திற்காக தந்தையை கொன்று தற்கொலை செய்துகொண்டதாக மகன் மற்றும் பேரன் நாடகமாடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!