கோவிலில் திருட முயற்சி; போலீசார் விசாரணை
X
திருப்பூரை அடுத்துள்ள செங்கப்பள்ளியில், கோவிலில் திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
By - S.Elangovan,Sub-Editor |28 July 2022 4:25 PM IST
திருப்பூரை அடுத்துள்ள செங்கப்பள்ளியில், கோவிலில் திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்துக்குளி பகுதி, செங்கப்பள்ளியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின், பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், மர்ம நபர்கள் சிலர், கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது, கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu