சூரியகாந்தி விதை ரூ. 1.04 கோடிக்கு விற்பனை

சூரியகாந்தி விதை ரூ. 1.04 கோடிக்கு விற்பனை
X

வெள்ளகோவிலில், 1.04   கோடி ரூபாய்க்கு சூரியகாந்தி விதை விற்பனை நடந்தது.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒரு கோடியே, நான்கு லட்சம் ரூபாய்க்கு சூரியகாந்தி விதை விற்பனை நடந்தது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. இதில் பழனி, தொப்பம்பட்டி, அம்மாபட்டி, வாகரை, தாராபுரம், வேடசந்துார், மூலக்கடை உள்ளிட்ட பகுதியிலிருந்து, 219 விவசாயிகள், 3,432 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இவற்றின் மொத்த எடை, ஒரு லட்சத்து, 69 ஆயிரம் கிலோ இருந்தது. இதற்கான ஏலத்தில், ஒரு கிலோ விதை அதிகபட்சமாக, 67.10 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 55.53 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், ஒரு கோடியே, 4 லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.

Next Story
ai solutions for small business