சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் ஒரு படி நெல்

சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் ஒரு படி நெல்

Tirupur News- சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டி 

Tirupur News- காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை கோவிலில், உத்தரவு பெட்டியில் ஒரு படி நெல் வைக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- சிவன்மலை கோவில் பெட்டியில் ஒரு படி நெல் வைக்கப்பட்டுள்ளதால், மங்களம் பெருகும் நிலை உருவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் ஒரு படிநெல் வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது.

சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும்.

இந்த தலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.

சிவன்மலை சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.

சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

சிறப்பு நிறைந்த இந்த கோவிலில் திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி வழிபாட்டு முறை உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி உணர்த்தும் பொருள், கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், கன்றுடன் கூடிய பசு மாட்டின் சிறிய சிலை வைத்து பூஜை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல், பொருள் மாற்றப்பட்டு ஒரு படி நெல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகளிடம் கூறுகையில்,''ஒரு படி நெல் வைத்து பூஜிப்பது சுபிட்சத்தை குறிக்கும்; மங்களகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். மகாலட்சுமியின் திருவருள் பரிபூரணமாக கிடைக்கும்; நாட்டில், மங்களகரமான நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும்; ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் வருவாய் பெருகும்; தொழில்துறையில் தடைகள் விலகும்; விவசாயம் செழிப்படையும்; விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்,'' என்றார்.

Tags

Next Story