காங்கயம் அருகே ரூ.43 லட்சம் மோசடியில் பெண் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
Tirupur News- பணமோசடி வழக்கில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்த காங்கயம் அருகே மகளிா் குழு மற்றும் தனிநபா் கடன் பெற்றுத்தருவதாக ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நீலகாட்டுபுதூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பாப்பிணியைச் சோ்ந்த ஏ.அருண்குமாா் ரூ.2 லட்சம் கடன் வாங்குவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது, நிதி நிறுவனத்தில் இருந்த கோபி (எ) வேதகிரி (40), தேவிகா (எ) பிரீத்தி (42), அருள்குமாா் (எ) சிவபிரகாஷ் (36), ஜான்கென்னடி (எ) அந்தோணி விணிசந்தா் (34) ஆகிய 4 பேரும் கடன் வழங்குவதற்காக ரூ.11 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையாகப் பெற்றுள்ளனா்.
பின்னா், கடன் வாங்கித்தராமல் போலி காசோலை வழங்கியுள்ளனா். இந்த 4 பேரும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் அக்டோபா் 9 ஆம் தேதி வரை பல்வேறு நபா்களிடம் மகளிா் குழு மற்றும் தனிநபா் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த மோசடி தொடா்பாக மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த அக்டோபா் 11 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த 4 போ் மீதும் பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, தொடா் மோசடி குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் பரிந்துரை செய்திருந்தாா்.
அதன்பேரில் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடம் போலீசார் வழங்கினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu