மூலனுாரில் ரூ. 3.55 கோடிக்கு பருத்தி விற்பனை

Cotton Roll Price | Cotton Sale
X

திருப்பூர் மாவட்டம், மூலனுாரில் நடந்த ஏலத்தில், ரூ. 3.55கோடிக்கு, பருத்தி விற்பனையானது.

Cotton Roll Price- திருப்பூர் மாவட்டம், மூலனுாரில் நடந்த ஏலத்தில், ரூ. 3.55கோடிக்கு, பருத்தி விற்பனையானது.

Cotton Roll Price- வெள்ளகோவிலை அடுத்துள்ள மூலனுாரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி ஏலம் நடந்தது. இதில் கோவை, ஈரோடு,திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பங்கேற்றனர். மொத்தம் 10,058பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதன் மொத்த எடை 3,272குவிண்டால்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இதில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூபாய் 8,550முதல் 11,802ரூபாயாக இருந்தது. சராசரி பருத்தி விலை குவிண்டாலுக்கு 10,650ரூபாயாக இருந்தது.

இதன்படி ஒட்டுமொத்தமாக 3.55 கோடி ரூபாய்க்கு, பருத்தி விற்பனையானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
why is ai important to the future