/* */

காங்கயம்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை

Tirupur News- காங்கயம், எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அமைச்சாிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

காங்கயம்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை
X

Tirupur News- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மக்கள் கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்குட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிடா் நலத் துறை, ஊராட்சி நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா் கள ஆய்வு செய்து 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என உறுதி செய்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், காங்கயம் வட்டாட்சியா் என தொடா்ந்து 6 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.

எனவே, சொந்த வீடோ அல்லது வீட்டுமனை பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2023 5:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...