ஊத்துக்குளியில் நாளை ( 26ம் தேதி) மின்தடை

ஊத்துக்குளியில் நாளை ( 26ம் தேதி) மின்தடை
X

Tirupur News- ஊத்துக்குளியில் நாளை (வியாழன்) மின்தடை அறிவிப்பு (கோப்பு படங்கள்)

Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ஊத்துக்குளியில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லகவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்; காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை

மின்தடை பகுதிகள்

விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story