சிவன்மலையில் மக்கள் சேவை முகாம்; 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவன்மலையில் மக்கள் சேவை முகாம்; 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

Tirupur News- சிவன்மலையில் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஈரோடு எம்பி கணேசமூா்த்தி உள்ளிட்டோா்.

Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் மக்கள் சேவை முகாம் நடந்தது. இதில், 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- காங்கயம், சிவன்மலையில் நடந்த மக்கள் சேவை முகாமில் 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவன்மலையில் நடைபெற்ற மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 498 பயனாளிகளுக்கு ரூ.3.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள்மலையில் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட படியூா், சிவன்மலை, கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம், பாலசமுத்திரம்புதூா் ஊராட்சிகளில் கலைஞா் மக்கள் சேவை முகாம் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இதில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டைகள், அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்கள், கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தில் விடுபட்டுபோன நபா்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், பட்டா மாறுதல், முதியோா் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாமில், 3,567 மனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில் 2, 178 பயனாளிகளுக்கு அன்றே தீா்வு காணப்பட்டது.

தற்போது 498 பயனாளிகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தீா்வுகாணப்படும் என்றாா். இதில், இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, நலவாரிய அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என 498 பயனாளிகளுக்கு ரூ.3.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, வருவாய் கோட்டாட்சியா் (தாராபுரம்) செந்தில்அரசன், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிஹரன், விமலாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு