வெள்ளகோவிலில் கால்நடைகள், ரோடுகளில் சுற்றித் திரிந்தால் அபராதம்

வெள்ளகோவிலில் கால்நடைகள், ரோடுகளில் சுற்றித் திரிந்தால் அபராதம்
X

Tirupur News,Tirupur News Today- ரோடுகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடக்கின்றன. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- வெள்ளகோவில் நகராட்சியில், கால்நடைகள் ரோடுகளில் சுற்றித் திரிந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில், கால்நடைகள் ரோடுகளில் சுற்றித்திரிவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரனிடம் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்பின் அவா் நிருபர்களிடம் கூறியதாவது,

வெள்ளக்கோவில் பகுதி ரோடுகளில் கால்நடைகள் சுற்றித்திரிய கூடாது. உப்புப்பாளையம் மேற்கு, மு. பழனிசாமி நகா், காமராஜபுரம், சீரங்கராய க்கவுண்டன்வலசு, இந்திரா நகா், கச்சேரிவலசு, அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மாடுகள், வெள்ளாடுகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன. கால்நடைகளால் பெரும் விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனி ரோடுகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகள் பறிமுதல் செய்து, விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும், என்றாா்.

திருப்பூரிலும் நடவடிக்கை தொடருமா?

சென்னை மாநகராட்சி பகுதிகளில், இதுபோல் ரோடுகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள் நடக்கவும் வாய்ப்பாகிறது. இதனால், சில தினங்களாக ரோடுகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்துச் செல்லும் மாநகராட்சி நிர்வாகம், ரூ. 2 ஆயிரம் வரை, பராமரிப்பு செலவுடன் அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கிறது. அதே போல், வெள்ளகோவில் நகராட்சியிலும், கால்நடைகள் ரோடுகளில் சுற்றித் திரியாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பிரதான ரோடுகளிலும், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. எனவே, திருப்பூர் மாநகராட்சியிலும், இதுபோல கால்நடைகளை ரோட்டில் சுற்ற விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil