காங்கேயம் பகுதி கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்
X
By - S.Elangovan,Sub-Editor |4 May 2022 6:00 AM IST
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கேயம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முத்திரை இல்லாத 121 மின்னணு தராசுகள், 20 மேஜை தராசுகள், 2 விட்ட தராசுகள், 26 இரும்பு எடைக்கற்கள் என 179 தராசுகள் மற்றும் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தெரிவித்த தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி, முத்திரை இடப்பட்டதற்கான சான்றிதழை, கடைக்காரர்கள் நன்கு தெரியும் வகையில் வைக்காவிட்டாலோ அல்லது உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாவிட்டாலோ அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu