காங்கயத்தில் 1050 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி
Tirupur News- காங்கயம் ஒன்றியத்தில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால் உயிரிழப்பும் நேரிடும். கோமாரி நோய் குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல், சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் ஆகியவற்றால் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.
இந்த நோய்களுக்கான அறிகுறிகளானது கால்நடைகளுக்கு காய்ச்சல் வரும், மந்த நிலையில் தீவனம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ்நீர் வரும். சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும். குறிப்பாக இந்நோய் மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும். இதனால் மழை காலம் தொடங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், முகாம் அமைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவார்கள். இதனால் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.
இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து காங்கயம் அரசு கால்நடைதுறை மருத்துவ மனையை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன் அறிவுரைப்படி நேற்று காங்கயம் ஒன்றியத்தில் 7 இடங்களில் முகாம் அமைத்து மாடு, எருமை உள்ளிட்ட 1050-கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதி கால்நடை டாக்டர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu