காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள் வழங்கல்

காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள் வழங்கல்
X

காங்கேயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவித்தொகையை, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருள் வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் 132 அர்ச்சகர்களுக்கு கொரோனா கால உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்பி., கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவித்தொகை வழங்கினர். கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். திருப்பூர் மாவட்டம் முழுவதும் 642 பேருக்கு, ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது, என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினித் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!