காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முதல்வர் நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை!

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்  முதல்வர் நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை!
X

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 2லட்சம்,  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. தன்னார்வலர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்க, தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்; தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில், மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வர் நிவாரண நிதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்க தலைவர் என்எஸ்என். தனபால், செயலாளர் கங்கா எஸ் சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜிஆர்.ரவிசந்திரன் ஆகியோர், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் இதை வழங்கினர்.

Tags

Next Story
ai marketing future