குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம்; வெள்ளகோவிலில் போலீசார் அறிவுறுத்தல்
Tirupur News- வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்று போலீஸ் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) அபிஷேக் குப்தா, காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் வெள்ளக்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
வெள்ளக்கோவில் பகுதியில் ஆங்காங்கே நடைபெற்ற வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு, வாகனத் திருட்டுச் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருடுபோன பொருள்களை முழுமையாக மீட்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் திருட்டு சம்பவங்களைத் தவிா்க்கலாம். தங்களிடம் வேலை செய்பவா்களிடம் பண வரவு, செலவுகள், நகைகள் இருக்கும் இடத்தை எக்காரணம் கொண்டும் காட்டிக்கொள்ளக் கூடாது. சொத்து பத்திரங்கள், நகைகளை வங்கி லாக்கரில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நகைகளை அணிந்து செல்ல வேண்டாம்.
வீடுகள், வியாபார நிறுவனங்களில் குறிப்பாக தனியாக இருக்கும் குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்றனா்.
மேலும் கண்காணிப்பு கேமராக்களை வீடுகளில் பொருத்திக்கொள்வது பல விதங்களில் நன்மை தருகிறது. வெளியில் இருந்தாலும் வீட்டின் அருகில், முன்பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் கண்காணிக்க முடியும். வீடுகளுக்குள் இருக்கும்போது இரவில், வீட்டுக்கு வெளியே அந்நிய நபர்கள் கண்காணித்தாலும் கேமராவில் அது பதிவாகும். அதுமட்டுமின்றி அந்த வழியாக சென்று வரும் நபர்கள் குறித்தும் கேமராவில் பதிவாகும் என்பதால், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவும் உதவுகிறது. வீடுகளில், தொழில் நிறுவனங்களில், அலுவலகங்களில், கடைகளில் பொருத்திக்கொள்வது முக்கியம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu