காங்கயத்தில் தொடரும் கனமழை; கொப்பரை உலர் களங்களில் பாதிப்பு
Tirupur News- காங்கயத்தில், தொடரும் மழையால் கொப்பரை உலர்களங்களில் பாதிப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் உள்ளன. மாவட்டத்தில் தேங்காய் சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், இப்பகுதியில் கொப்பரை உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பகுதியில் காணப்படும் சிதோஷ்ண நிலையும் கொப்பரை உற்பத்திக்கு உதவியாக இருந்து வருகிறது. இதனால், தேங்காய் எண்ணெய் ஆலைகளும் இப்பகுதியில் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் திறந்தவெளி களங்களாக இருப்பதால் கொப்பரை உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால், கொப்பரை உற்பத்திக்காக உடைக்கப்பட்ட தேங்காய்கள் தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
கொப்பரை உற்பத்தி பாதிப்பால் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதால் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
ஏற்கனவே தென்னை மரங்களில் நோய் தாக்கம், தேங்காய்களுக்கு உரிய விலை இல்லை போன்ற பாதிப்புகளில் இப்போது கொப்பரை தேங்காய்களை உலர்த்தும் களங்களும் மழையால் பாதிக்கப்படுவது, விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu