காங்கயத்தில் ரூ.10க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் திறப்பு

காங்கயத்தில் ரூ.10க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் திறப்பு
X

Tirupur News- காங்கயத்தில் ரூ.10க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் திறப்புவிழா நேற்று நடந்தது. 

Tirupur News- காங்கயம் நகரில் ரூ.10க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் நேற்று திறக்கப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் நகரில் ரூ.10க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

ஆற்றல் உணவகம் மூலம் மிகக்குறைந்த விலையான ரூ.10க்கு மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது. தற்போது ஈரோடு மற்றும் குமாரபாளையம், தாராபுரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட தொகுதிகளில் ஆற்றல் உணவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் 3000க்கும் அதிகமான மக்கள் உணவகத்தால் பயனடைந்து வருகின்றனர்.

ஆற்றல் அறக்கட்டளை என்ற அமைப்பின் சாா்பில் ஈரோடு, குமாரபாளையம், தாராபுரம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.10 சேவைக் கட்டணத்தில் உணவு வழங்கும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் தினமும் 2.27 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் ரூ.10-க்கு உணவு வழங்கும் ஆற்றல் உணவகம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

காங்கயம் நகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தின் திறப்பு விழாவுக்கு எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தாா். எதிா்க்கட்சி கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி உணவகத்தைத் திறந்துவைத்தாா்.

இதில் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா், எம்.எல்.ஏ. மகேந்திரன், காங்கயம் ஒன்றிய அதிமுக செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ், நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!